உளுந்தூர்பேட்டை நில அளவையர் ஹரிநாத்திடம் திருப்பதி திருமலா தேவஸ்தானத்தினம் மூலம் அமைக்கப்பட உள்ள கோயிலுக்காக பதிவு செய்யப்பட்ட இடத்தின் பத்திரத்தை வழங்கும் சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுரு. 
Regional02

திருப்பதி தேவஸ்தானம் மூலம் உளுந்தூர்பேட்டையில் கோயில் அமைக்க ஆயத்தம்

செய்திப்பிரிவு

உளுந்தூர்பேட்டையில் திருப்பதி திருமலா தேவஸ்தானத்தின் மூலம்வெங்கடாஜலபதி கோயில் கட்டும் பணிக்கான இடத்துக்கான பத்திரம் ஒப்படைக்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டையில் சேலம் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே 4 ஏக்கர் நிலப் பரப்பில் திருப்பதி தேவஸ்தானத்தின் மூலம் வெங்கடாஜலபதி கோயில் அமையவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உளுந்தூர் பேட்டை சட்டப்பேரவை உறுப்பினரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பி னருமான குமரகுரு, நேற்று முன் தினம் இடத்துக்கான பத்திரத்தை நிர்வாக அறங்காவலரிடம் வழங்கி னார்.

அதைத்தொடர்ந்து, நிலம் அளவீடு செய்து நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக நில உளுந்தூர்பேட்டை நில அளவையர் ஹரிநாத்திடம் கோயிலுக்காக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை யும் நேற்று வழங்கினார்.

SCROLL FOR NEXT