Regional02

சசிகலா வருகையை கண்டு அதிமுகவினர் அஞ்சுவது ஏன்? முத்தரசன் கேள்வி

செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் முத்தரசன் கள்ளக்குறிச்சியில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியது:

சசிகலா நாளை (இன்று) தமிழகம் வரவுள்ளார்.அவர் வருகையின் போது கலவரம் நடக்க வாய்ப்புள்ளது எனக் கூறி தமிழக மூத்த அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என டிஜிபி அறிக்கை வெளியிட்டுள்ளார். டிஜிபி திரிபாதி நேர்மையானவர். அவர் எக்காரணத்தை கொண்டும் உட்கட்சி விவகாரங்களில் தலையிடக் கூடாது. சசிகலா வருகையை கண்டு அதிமுகவினர் அஞ்சுவது ஏன்?.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுகவை வெளியில் இருக்கும் வேறொரு கட்சித் தான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அக்கட்சி சொல்படி தான் அதிமுவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வரும் 18-ம் தேதி மதுரையில் "தமிழகத்தை மீட்போம்" என்ற மாநாடு நடைபெறுகிறது. இதில் கட்சியின் அகில இந்திய செயலாளர் டி.ராஜா, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிடோர் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT