Regional04

சிவகங்கையில் அரசு ஊழியர் நூதன போராட்டம்

செய்திப்பிரிவு

சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மண் பாத்திரம் ஏந்தி, நெற்றியில் பட்டை அடித்து யாசகம் கேட்கும் போராட்டத்தை நடத்தினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சத்துணவு அங்கன்வாடி உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கரோனா தொற்றை காரணம் காட்டி பறிக்கப்பட்ட அகவிலைப்படி சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சிவகங்கை அரண்மனைவாசல் முன் இருந்து தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தினர் பேரணியாக புறப்பட்டுச் சென்று எம்ஜிஆர் சிலை முன் மறியலில் ஈடுபட முயன்றனர். போலீஸார் அவர் களைத் தடுத்து நிறுத்தியதும் பெண்கள் சாலையில் புரண்டு போராட்டம் நடத்தினர். சிலர் யாசகம் கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கி ருந்த 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT