தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நா.முருகப்பிரசன்னா அறிக்கை: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி, சேலை தூத்துக்குடி, திருச்செந்தூர், வைகுண்டம், எட்டயபுரம், கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஆகிய இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு, வேட்டி, சேலை பெற நலவாரிய அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை 0461-2341110 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.