கீழ்பென்னாத்தூர் அருகே நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பெண் ஒருவருக்கு அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கிய எம்எல்ஏ கு.பிச்சாண்டி. 
Regional02

இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சோ.நம்மியந்தல் கிராமத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவர் சத்யா தலைமை வகித்தார். வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சரவணன் வரவேற்றார். முகாமை, எம்எல்ஏ கு.பிச்சாண்டி தொடங்கி வைத்து, பெண்களுக்கு அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் மற்றும் சத்துணவு பொருட்களை வழங்கினார். நீரிழிவு, இருதயம், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட் டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. இதில், மருத்துவர்கள் விஜயகுமார், சரயுகாயத்ரி, ராஜலட்சுமி, கனிமொழி உட்பட பலர் கலந்துகொண்டனர். 

SCROLL FOR NEXT