அரசுப் பள்ளி முதுநிலை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்ற 153 அமைச்சு பணியாளர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள், அமைச்சு பணியாளர்களுக்கான கல்வித் தகுதி, நியமன விதிகளில் கடந்த ஆண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், தகுதியுடைய 153 பணியாளர்கள், முதுநிலைஆசிரியர் பதவி உயர்வுக்கு சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை நேற்று வழங்கப்பட்டது.
அதேபோல், அரசுப் பள்ளிகளில் உள்ள சிறப்பாசிரியர் (ஓவியம்) பணிக்கு தேர்வான 34 பட்டதாரிகளுக்கும் பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.