Regional01

லஞ்சம் வாங்கிய வா.பகண்டை விஏஒ கைது

செய்திப்பிரிவு

விக்கிரவாண்டியை அருகே விஸ்வரெட்டிப்பாளையம் கிராமத் தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (54), விவசாயியான இவர், கிரைய நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி வா.பகண்டையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று, அங்கு பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலரான மூங்கில்பட்டைச் சேர்ந்த விஸ்வரங்கன் (45) என்பவரை அணுகினார். ரூ.3 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று விஸ்வரங்கன் கூறியதாக தெரிகி றது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, ரசாயன பொடி தடவிய பணத்தை நேற்று பன்னீர்செல்வம் வா.பகண்டை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று, விஸ்வரங்கனிடம் லஞ்சப் பணத்தை கொடுத்தார்.பணத்தை வாங்கியபோது, அங்கு ஏற்கெனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி யுவராஜ் தலைமையிலான போலீஸார் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வரங்கனை கைது செய்து, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், விழுப்பு ரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் சிறையில் அடைத் தனர்.

SCROLL FOR NEXT