விழுப்புரம் அருகே கள் இறக்க அனுமதி கேட்டு போராட்டம் நடைபெற்றது. 
Regional01

கள் இறக்க அனுமதி கேட்டு போராட்டம்

செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே நரசிங்கனூர் கிராமத்தில், கள் இறக்க அனுமதி கேட்டு மாநில கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் நேற்று கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடைபெற்றது. அப்போது கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக அரசு கள் இறக்க உடனடியாக அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் இதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும். கள் இறக்க அனுமதிக்காவிட்டால் 234 தொகுதிகளில் போட்டியிடுவோம். அல்லது ஒரே தொகுதியில் 1,000 பேர் போட்டியிட்டு, தமிழகம் திரும்பி பார்க்கும் வகையில் எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றார்.போராட்டத்தில் ஈடுபட்ட 55 பெண்கள் உட்பட 162 பேர் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT