Regional02

கீழக்கரை அருகே மாமியாரை குத்திக் கொன்ற மருமகன் கைது

செய்திப்பிரிவு

கீழக்கரை அருகே இடிஞ்சகல் புதூரில் குடும்பத் தகராறு காரணமாக, மாமியாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகனை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே இடிஞ்சகல் புதூரைச் சேர்ந்த பஞ்சப்பன் மனைவி பொன்னம்மாள்(60). இவருக்கும், மருமகன் முருகனுக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு பொன்னம்மாளுக்கும் முருகனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முருகன் கத்தியால் பொன்னம்மாளை குத்தினார். சம்பவ இடத்திலேயே பொன்னம்மாள் உயிரிழந்தார். இது தொடர்பாக முருகனை கீழக்கரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT