Regional02

தேசிய தடகளப்போட்டியில்பங்கேற்கும் திண்டுக்கல் மாணவர்

செய்திப்பிரிவு

திண்டுக்கல் எம்.எஸ்.பி., பள்ளி மாணவன் ஜித்தின் அர்ஜூனன், சிவகாசியில் நடந்த மாநில தடகளப்போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதையடுத்து இம்மாணவர் தேசிய தடகளப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.பிப். 6 முதல் 10-ம் தேதி வரை அசாம் மாநிலத்தில் தேசிய தடகளப் போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கச் செல்லும் ஜித்தின் ஆர்ஜூனை மாநில தடகள சங்கத் தலைவர் தேவாரம், செயலாளர் லதா, திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் மருதராஜ் உள்ளிட்ட பலர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT