புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகே தூத்தாக்குடியில் உள்ள ஏரியில் ஓரளவுக்கு நீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் ஏரிக்கரையை சிலர் உடைத்து, அதில் இருந்த தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் மடத்துவயலைச் சேர்ந்த ஆர்.ராமச்சந்திரன், ரெத்தினக்கோட்டை தங்கராஜ், பாண்டி, மகேந்திரன் ஆகியோர் மீது அறந்தாங்கி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.