Regional01

லூர்து அன்னை ஆலய பெருவிழா

செய்திப்பிரிவு

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கியது. இதை முன்னிட்டு தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ரோலிங்டன், நற்செய்தி நடுவம் இயக்குநர் அருட்திரு ஸ்டார்வின் தலைமையில் திருவிழா கொடி மந்திரிக்கப்பட்டு, ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து திருப்பலியும், மறையுரையும் நடந்தது.

திருவிழா காலங்களில் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி, மறையுரை நடக்கிறது. பிப்ரவரி 13-ம் தேதி மாலை 6 மணிக்கு மறை மாவட்ட முதன்மை குரு என்.ஏ.பன்னீர் செல்வம், கீழவைப்பார் பங்குத் தந்தை ஆண் டனி ஜெகதீசன் தலைமையில் திருப்பலி, சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT