Regional01

மராத்தான்

செய்திப்பிரிவு

நீர் நிலைகளை காக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2-ம் தேதி உலக ஈரநிலங்கள் தினம் அனுசரிக்கப் படுகிறது. 2021-ம் ஆண்டுக்கான ஈர நிலங்கள் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அருகே உள்ள பிராஞ்சேரி குளத்தில் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் தொடங்கி வைத்து, பங்கேற்பாளர்களுடன் இணைந்து 11 கி.மீ தூரம் ஓடினார். நெல்லை ரன்னர்ஸ் சங்க தலைவர் காஞ்சனா சுரேஷ், நெல்லை இயற்கைச் சங்க தலைவர் அமரவேல் பாபு, அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மைய மூத்த ஆராய்ச்சியாளர் மு.மதிவாணன் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT