விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம் அமைப்பினர். 
Regional01

விழுப்புரத்தில் பாஜக நிர்வாகிகளை கண்டித்து முஸ்லிம்கள் முற்றுகை

செய்திப்பிரிவு

அவதூறாக பேசியதாக பாஜக நிர்வாகி கல்யாணராமன் மற்றும் அவரது பேச்சை ஆதரித்த ஜெய்சங்கரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி முஸ்லிம் அமைப்புகள், ஜமாத்துகள் சார்பில் விழுப்புரம் ஆட்சியர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்டவளாகம் எதிரே நேற்று கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது, எஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பாஜக நிர்வாகிகள் இருவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி மனு அளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT