கோரிக்கைகளை வெளியிட்ட மேய்ச்சல் சமூக அமைப்பு நிர்வாகிகள். 
Regional01

மேய்ச்சல் சமூக மேம்பாட்டு நல வாரியம் அமைக்கப்படுமா? கிடை மாடு, ஆடுகள் வளர்ப்போர் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

மதுரையில் கிடை ஆடு, மாடு மேய்ச்சல் சமூக ஆய்வு மேற்கொள்ளும் தொழுவம் ஆய்வாளர் பெரி.கபிலன் மற்றும் மேய்ச்சல் தொழி லாளர்கள் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தென்மாவட்டங்களில் மேய்ச்சல் சமூகத்தினர் அதிகம் இருந்தனர். இவர்களை அரசும், சமூகமும் அங்கீகரிக்காததால் பொருளாதாரப் பின்னடைவை சந்தித்து ஆண்டுக்கு 6.7 சதவீதம் கால்நடை வளர்ப்புத் தொழில் குறைந்து வருவது கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இவர்களின் கோரிக்கைகள் அரசின் பார்வைக்குச் செல் தில்லை. அரசு இவர்களுக்கான தொழில் சார்ந்த திட்டங்களை வகுக்க வேண்டும். நீர் நிலைகளில் கிடை மாடுகள், ஆடுகள் தண்ணீர் குடிக்க அனுமதிக்க வேண்டும். கிடை மாடுகளின் சாணம் முழுக்க கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்தில், கிடைமாடு, ஆடுகள் உரத்தைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேய்ச்சல் சமூக மேம்பாட்டு நல வாரியம் அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT