Regional02

மலேசியாவில் இறந்தவரின் உடலை தேனிக்கு கொண்டுவரக்கோரி மறியல்

செய்திப்பிரிவு

தேனி-அல்லிநகரம் சொக்கம்மன் தெருவைச் சேர்ந்த தம்பதி கருப்பசாமி-மகாலட்சுமி. இவர்களது மூத்த மகன் முத்துக்குமார்(23). இவர் 2019-ம் ஆண்டு செப்டம்பரில் மலேசியாவில் வேலைக்குச் சென்றார். அங்கு கடந்த 1-ம் தேதி இரவு அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தக வல் வந்தது.

அவரது உடலைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி முத்துக் குமாரின் குடும்பத்தினர் மற்றும் உற வினர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ், காவல் ஆய்வாளர்கள் ராமலட்சுமி, விக்டோரியா ஆகியோர் இளைஞரின் உடலைக் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT