திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அருள் அறிக்கை:
திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) உலோகத்தகடு வேலையாள், பற்ற வைப்பவர், தச்சர் ஆகிய தொழிற்பிரிவுகளில் சேர நேரடி சேர்க்கைக்கான கடைசி நாள் 15.2.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் உதவித்தொகை ரூ750, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட பல சலுகைகள் அளிக்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு வயது வரம்பு 40 மற்றும் பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.
விருப்பமுள்ளோர் 15.2.2021 வரை இந்நிலையத்துக்கு அனைத்து சான்றிதழ்களுடன் நேரடியாக வரலாம். விவரங்களுக்கு திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை 04639-242253 மற்றும் 8695047687 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.