கூட்டுக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகர் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், மத்திய அரசின் கீழ் உள்ள ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்குதல் மற்றும் அதிக லாபம் ஈட்டும் 2 பெரிய வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் கண்டனத்துக்குரியது. தனியார்மய முடிவை கைவிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.