கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ். கலைக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர் முருகு, இளவழகனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது. 
Regional02

ஆர்.கே.எஸ்.கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி யில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பாக தேசியக் கருத்தரங்கம் நடை பெற்றது.

‘சங்க இலக்கிய குறிஞ்சித்தி ணைப் பாடல்களில் வாழ்வியல்' என்னும் தலைப்பில் நடைபெற்றஇந்த கருத்தரங்கில் பெங்களூரிலி ருந்து முருகு.இளவழகன் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண் டார். குறிஞ்சி நிலஅமைப்பு, வாழ்வியல் போன்ற தகவல்களை எடுத்துரைத்தார். கருத்தரங்கின் தொடக்கத்தில் தமிழ்த்துறை தலைவர் ரா.பிரவீனா வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர். கு.மோகனசுந்தர் தொடக்கவுரையாற்றினார்.

கல்வி நிறுவனங்களின் தலை வர் மருத்துவர். க.மகுடமுடி தலைமையுரையாற்றினார். என்.கோவிந்தராஜு முன்னிலை உரைநிகழ்த்தினார். கல்லூரியின் துணைமுதல்வர் பெ.ஜான்விக்டர் வாழ்த் துரை வழங்கினார். கருத்தரங்கில் உதவிப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் ஆய்வு கட்டுரை வழங்கினர். கருத்தரங்கின் இறுதியாக தமிழ்த்துறை உதவிப்பேராசிரி யர் முனைவர் க.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

கருத்தரங்கிற்கான ஏற்பாடு களை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் பாண்டியன், நாகராஜன், வை.பிந்து, சித்ரா, செல்வி மற்றும் தாமரைச்செல்வி மற்றும் மாணவ, மாணவிகள் செய் திருந்தினர்.

SCROLL FOR NEXT