Regional01

பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். ராஜமோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.ராஜேந்திரன் பேசினார். பொது சுகாதாரத் துறையில் சுகாதார ஆய்வாளர் பணியிலிருந்து அடுத்தக்கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். முகக் கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பதில் கட்டாய இலக்கை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

SCROLL FOR NEXT