Regional01

தமிழ்செம்மல் விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுக்கு தமிழ் வளர்ச்சித் துறை2020-ம் ஆண்டுக்கான தூத்துக்குடி மாவட்ட தமிழ் செம்மல்விருதை அளித்துள்ளது.

கடந்த 1-ம் தேதி சென்னைதலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் கே.பழனிசாமி விருதை வழங்கினார்.

வைகுண்டம் தாலூகாநிர்வாகம் சார்பில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்து நினைவுப் பரிசு வழங்கினார்.

தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவகுமார், தேர்தல் துணை வட்டாட்சியர் சிவகுமார்,மண்டல துணை வட்டாட்சியர் சங்கரநாரயணன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் ஊராட்சித் தலைவர் பார்வதிநாதன், செயலாளர் சங்கரபாண்டியன், வாசகர் வட்டப் பொருளாளர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT