Regional02

மறியலில் ஈடுபட்ட 657 பேர் கைது

செய்திப்பிரிவு

நபிகள் நாயகம் குறித்து அவதூறாகபேசியதாக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீது தேசியபாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நீலகிரி மாவட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அனைத்து ஜமாஅத் ஒருங்கிணைந்த போராட்டக் குழு சார்பில் உதகை மத்திய பேருந்து நிலையம் முதல் சேரிங்கிராஸ் காந்தி சிலை வரை கண்டன பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இதற்கு போலீஸார் அனுமதி வழங்காத நிலையில், தடையை மீறி பேரணி நடத்தினர். அவர்களை தடுத்து நிறுத்தி 176 பெண்கள் உட்பட 657 பேரை போலீஸார் கைது செய்தனர். பேரணியால்,லோயர் பஜார் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மத்திய பேருந்து நிலையத்துக்குள் சென்று, வெளியே செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டன.

SCROLL FOR NEXT