Regional01

சசிகலா போஸ்டர்போலீஸில் வழக்கறிஞர் புகார்

செய்திப்பிரிவு

சசிகலாவுக்கு ஆதரவாக எனது பெயரில் போஸ்டர் ஒட்டியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு வழக்கறிஞர் கண்ணன் சிவகங்கை போலீஸில் புகார் அளித்தார்.

சொத்துக் குவிப்பு வழக் கில் தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா பெங்களூருவில் தங்கியுள்ளார். இந்நிலையில் சிவகங்கையில் அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட அரசு கூடுதல் வழக்கறிஞர் சி.கண்ணனின் பெயரில் சசிக லாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

தனது பெயர், புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தி போஸ் டர்கள் ஒட்டியோர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் கண்ணன் போலீ ஸில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக சிவகங்கை டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT