Regional02

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 4,700 பேருக்கு கரோனா தடுப்பூசி ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 4,700 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கெனவே தஞ்சாவூர் மருத் துவக் கல்லூரி முதல்வர் எஸ்.மருததுரை மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்நிலையில், அங்கு ஆட்சியர் ம. கோவிந்தராவ் நேற்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 4,700 பேர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண் டுள்ளனர். இவர்களில், சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, போடப்பட்டது. அடுத்தகட்டமாக, முன்களப் பணியாளர்களுக்கு பிப்.2-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நானும் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இந்தத் தடுப்பூசியால் எந்தவிதப் பக்கவிளைவும் இல்லை. எனவே, அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றார்.

SCROLL FOR NEXT