FrontPg

முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்கிறோம் சேலத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அதிமுக பெரிய கட்சி. அதிமுக தலைமையில்தான் தேர்தலை சந்திக்க உள்ளோம். முதல்வர் வேட் பாளரை அதிமுக அறிவித்துள் ளது. அந்த முடிவை நாங் கள் ஏற்கிறோம் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற வுள்ள பாஜக இளைஞரணி மாநாடு ஏற்பாடுகளை பார்வை யிட சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியதாவது:

தேசத்தின் வளர்ச்சியையும் தமிழகத்தின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு மத்திய நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள் ளது. திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க் கட்சித் தலைவர் என்பதால் நிதிநிலை அறிக்கையை அவர் வரவேற்கவில்லை. தமிழகத்தின் வளர்ச்சியை, தேசத்தின் வளர்ச் சியை தடுக்க நினைக்கும் சிலர் வேண்டு மென்றே சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை திட்டமிட்டு எதிர்க்கிறார்கள்.

அதிமுக-வுடன் இணைந்து வரும் சட்டப்பேரவை தேர்தலை பாஜக சந்திக்க வுள்ளது. எங்கள் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். தமிழகத்தில் அதிமுக பெரிய கட்சி. அதிமுக தலைமையில் தான் தேர்தலை சந்திக்க உள் ளோம். அதிமுக அறிவித் துள்ள முதல்வர் வேட்பாளர் முடிவை நாங்கள் ஏற்கிறோம்.

ராகுல் காந்தி தமிழகத் துக்கு வருவது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை காணாமல் போகச் செய்துவிடும். தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அந்தக் கூட்டணி விரை வில் உடைவதற்கு வாய்ப்பு உள்ளது. சசிகலாவின் வருகை மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது, அவர் தமிழகம் வந்த பின்னரே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT