Regional02

அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

செய்திப்பிரிவு

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (23). திருப்பூரில் தங்கி ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். யுனிவர்சல் திரையரங்கம் அருகே தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கோயில்வழி நோக்கிசென்ற அரசு நகரப்பேருந்தில் சென்றுள்ளார்.

மது போதையில் இருந்ததால் பேருந்தின் நடத்துநர் அவரை கீழே இறங்க அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. சந்திராபுரம்சோதனைச்சாவடி அருகே பேருந்து வந்தபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம் கூறி ரமேஷை பேருந்திலிருந்து நடத்துநர் இறக்கியுள்ளார். இதனால் அதிருப்திடைந்த ரமேஷ், பேருந்தின் மீது கல் வீசி கண்ணாடியை உடைத்துள்ளார். இது தொடர் பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT