Regional02

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து சரிந்தது

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை முற்றிலும் சரிந்தது.

தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும், கெலவரப் பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இருக்கும். இந்நிலை யில் கடந்த சில தினங்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. அதன்படி கிருஷ்ண கிரி அணைக்கு நீர் வரத்து நேற்று காலை முற்றிலும் நின்றது. அணையில் இருந்து 2-ம் போக சாகுபடிக்காக வலது மற்றும் இடதுபுறக்கால்வாய் வழியாக விநாடிக்கு 162 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் 50.20 அடிக்கு தண்ணீர் உள்ளது.

SCROLL FOR NEXT