Regional02

திண்டிவனம், விருத்தாசலம் விபத்துகளில் அரசு பேருந்துகள் மோதி 3 பேர் உயிரிழப்பு சிதம்பரத்தில் மினி வேன் விபத்தில் 7 பேர் படுகாயம்

செய்திப்பிரிவு

திண்டிவனம், விருத்தாலத்தில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் அரசு பேருந்துகள் மோதி 3 பேர் உயிரிழந்தனர்.

திண்டிவனம், கிடங்கல் 2 பகுதியைச் சேர்ந்தவர்கள் காமராஜ் மகன் கரண் (21), குமார் மகன் ராம்(29). பெயிண்டர்களான இருவரும் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

காவேரிப்பாக்கம் ஏரிக்கரை அருகே வந்தபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற அரசு பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் கரண்,ராம் இருவரும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்த ராம் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவல் அறிந்த திண்டிவனம் போலீஸார் இறந்த இருவரின் உடல்களை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மற்றொரு விபத்து

இந்த விபத்து தொடர் பாகவிருத்தாசலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 பேர் படுகாயம்

சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT