Regional01

மகளுக்கு கட்டாய கருக்கலைப்பு செய்த பெற்றோர் கைது

செய்திப்பிரிவு

ஆத்தூர் அருகே மகளுக்கு கட்டாய கருக்கலைப்பு செய்த பெற்றோரை போலீஸார் கைது செய்தனர்.

ஆத்தூர் அருகே சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி (40). இவரது மனைவி செல்வி (36). இவர்களது மகள் ரேணுகாதேவி (19). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வந்தார். ரேணுகாதேவி, சமூக வளைதலத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (23) என்பவரை காதலித்து வந்தார்.

இவர்களின் காதலுக்கு ரேணுகாதேவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி ரேணுகாதேவி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி கணேசனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் பெற்றோர் சமாதானம் அடைந்த நிலையில், ஜனவரி 21-ம் தேதி பெற்றோர் வீட்டுக்கு ரேணுகாதேவி வந்தார்.

அப்போது, கர்ப்பமாக இருந்த ரேணுகாதேவியின் மனதை மாற்றிய பெற்றோர் அவருக்கு கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளனர். இத்தகவலை ஜனவரி 28-ம் தேதி ரேணுகாதேவி, தனது கணவருக்கு

தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த கணேசன், இதுதொடர்பாக சேலம் எஸ்பி தீபாகாணிகரிடம் புகார் செய்தார்.

இதுதொடர்பாக ஆத்தூர் மகளிர் போலீஸார் விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். விசாரணையில், கட்டாய கருக்கலைப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ரேணுகாதேவியின் தந்தை சுப்ரமணி, தாய் செல்வி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT