தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 44 தொழிலாளர் சட்டங்களைரத்து செய்து மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள 4 தொகுப்பு சட்டங்களையும் தமிழகஅரசு புறக்கணிக்க வேண்டும்.அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சட்டத்தையும், அதன் கீழ் இயங்கும் 18 நலவாரியங்களையும் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும். மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், தேசிய மீன்வள கொள்கை 2020-க்கு எதிராகவும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தீர்மானம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு வீட்டுவேலை தொழிலாளர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோன்மணி, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.