Regional01

இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

பிளஸ் 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உடனே தமிழக அரசு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார்.

மாநில துணைச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, மாநிலக் குழு உறுப்பினர் ஓவியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT