ஆரணி அடுத்த கல்பூண்டி கிராமத்தில் கால்நடை பார்வை கிளை நிலையத்தை திறந்து வைத்து கால்நடைக்கு சிகிச்சை அளிப்பதை பார்வையிட்ட அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன். அருகில், ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்டோர். 
Regional02

ஆரணி அருகே 4 கிராமங்களில் கால்நடை பார்வைகிளை நிலையங்கள் திறப்பு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 4 கிராமங்களில் கால்நடை பார்வை கிளை நிலை யங்கள் திறப்பு விழா நடை பெற்றது.

ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். முள்ளண் டிரம், கல்பூண்டி, அத்திமலைப் பட்டு, கரிப்பூர் ஆகிய 4 கிராமங் களில் கால்நடை பார்வை கிளை நிலையங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கால்நடை களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளன. இதில், வட்டாட்சியர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

SCROLL FOR NEXT