Regional02

மருத்துவ சட்டத்துக்கு எதிராக வாகனப் பேரணி

செய்திப்பிரிவு

மத்திய அரசு 58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளை சால்ய தந்திரம் என்று பட்டியலிட்டு, இந்த சிகிச்சைகளை செய்ய ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அறுவை சிகிச்சை முறைகள் நவீன மருத்துவத்தை சார்ந்துள்ள சூழ்நிலையில், இதுகுறித்து முன் அனுபவம் இல்லாத ஆயுர்வேத மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது உயிருக்கு ஆபத்தாக அமையும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த கலப்பட மருத்துவத்தை தடை செய்ய வலியுறுத்தி, இந்திய மருத்துவ சங்க திருப்பூர் கிளை சார்பில், மருத்துவர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி தாராபுரம் சாலையிலுள்ள அலுவலகத்தில் இருந்து நேற்று வாகனப் பேரணி சென்றனர். இந்திய மருத்துவ சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் மருத்துவர் ஆ.முருகநாதன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த வாகனப் பேரணி கோவையில் முடிவடைந்தது.

SCROLL FOR NEXT