திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி விருமாண்டம்பாளையம் ஒத்தைபனைமேடு மகாலட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த தம்பதி ராஜேஷ், கவுசல்யா (24). நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் ஆதியூர் பிரிவிலிருந்து வீடு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். மகாலட்சுமி நகர் அருகே பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர்,கவுசல்யா கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர். கவுசல்யாவும் நகையை கையால் பிடித்துக்கொண்டதால், ஒரு பவுன் அளவுள்ள நகைமட்டும் அவர்களிடம் சிக்கியுள்ளது. அவர்களும் தப்பிவிட்டனர். ஊத்துக்குளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.