பரங்கிப்பேட்டை ஒன்றியம் பூவாலை ஊராட்சியில் மினி கிளினிக்கை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார். 
Regional02

பரங்கிப்பேட்டை பகுதியில் மினி கிளினிக் திறப்பு

செய்திப்பிரிவு

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மினி கிளினிக் நேற்று திறக்கப்பட்டது.

சி.புதுப்பேட்டை, சேந்திர கிள்ளை, பூவாலை கிராமங்களில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு மினி கிளினிக்குகளை திறந்து வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அமுதா பெருமாள் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட அதிமுக அவைத்தலைவர் குமார், சிதம்பரம் வேளாண் விற்பனை சங்க தலைவர் டேங்க் சண்முகம், ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோவிராசாங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT