திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவரான சுப்பிரமணியர், தை உத்திர நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டார். தை உத்திரம் நாளான நேற்றுவருஷாபிஷேகம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இரவில், சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.