மகாதேவமலை மகானந்த சித்தரை சந்தித்து ஆசி பெற்ற நடிகர் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ். 
Regional02

மகானந்த சித்தரிடம் ஆசி பெற்ற ரஜினியின் சகோதரர்

செய்திப்பிரிவு

குடியாத்தம் அருகேயுள்ள மகாதேவ மலை மகானந்த சித்தரை நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் சந்தித்து ஆசி பெற்றார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மகாதேவமலையில் உள்ள மகானந்த சித்தரை முக்கிய அரசியல் பிரமுகர்கள் அவ்வப்போது சந்தித்து ஆசி பெற்றுச் செல்கின்றனர். அந்த வகையில், நடிகர் ரஜினி காந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் நேற்று முன்தினம் இரவு சந்தித்து ஆசி பெற்றார்.

அப்போது, ரஜினியின் உடல் நிலை குறித்தும் சத்யநாராயண ராவிடம் மகானந்த சித்தர் கேட்டறிந்தார். பின்னர், ரஜினிகாந்த் பூரண உடல் நலம் பெற்று ஆரோக்கியமாக இருக்க மகானந்த சித்தர் ஆசி வழங்கியதுடன், சத்யநாராயண ராவுக்கு இனிப்பு ஊட்டி அருளாசி வழங்கினார்.

இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது.

SCROLL FOR NEXT