கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சுகாதாரத் துறையின் அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் ஒருமாத ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பநர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பநர் சங்க மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் மாநில தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் சங்கர், மாவட்டச் செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கரோனா தொற்றின்போது அரசின் அவசர கால நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆய்வக நுட்பநர் உள்ளிட்ட அனைத்துப்பிரிவு ஊழியர்களுக்கும் அரசாணையின்படி, ஒரு மாத ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். நுட்பநர் நிலை 1 பதவியை உருவாக்க வேண்டும்.
கரோனா தொற்று காலத்தில் மரணமடைந்த ஆய்வக நுட்பநர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும். ஒப்பந்த பணி நியமனத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.