Regional01

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம்

செய்திப்பிரிவு

கரோனா அச்சம் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர் கூட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், அரசின் தளர்வுகளால் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று முதல் (பிப்.1) நடைபெற உள்ளது.

இதில், பொதுமக்களின் தங்கள் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை ஆட்சியரிடம் நேரடியாக வழங்கலாம் என செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT