கல்வராயன்மலை மல்லிகைப்பாடியில் சாராய ஊரல்களை அழிக்கும் போலீஸார். 
Regional01

கள்ளக்குறிச்சியில் 2,350 லிட்டர் சாராய ஊரல்கள் அழிப்பு

செய்திப்பிரிவு

கல்வராயன்மலையில் 2,350 லிட்டர் சாராய ஊரல்களை மதுவிலக்கு போலீஸார் கண்டுபிடித்து அழித்தனர்

கள்ளக்குறிச்சி எஸ்பி ஜியாவுல்ஹக் உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கல்வராயன்மலையில் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மேல்வாழப்பாடி ஓடையில் 8 பேரல்களில் மொத்தம் 1,600 லிட்டர் சாராய ஊரல்கள், மல்லிகைபாடி முண்டியூர் ஓடையில்5 பேரல்களில் மொத்தம் 750 லிட்டர் ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக முத்துசாமி என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT