Regional01

ஆட்டோ ஓட்டுநர் கொலையில் 4 பேர் கைது

செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகே முன் விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய் யப்பட்டனர்.

திண்டுக்கல் அருகே பால கிருஷ்ணாபுரம் கொல்லம் புதூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கலையரசன் (33). இவர், அமமுக ஒன்றிய இளைஞரணி செயலாளராக இருந்தார். இவரை நேற்று முன்தினம் இரவு ஏர்போர்ட் நகர் அருகே சிலர் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர்.

திண்டுக்கல் தாலுகா போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் கலையரசனின் உறவினரான அய்யப்பன் (35) உள்ளிட்டோர் முன்விரோதம் காரணமாக அவரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பன், வன்னியப் பாறைப் பட்டியைச் சேர்ந்த சொக்கன் (27), நாகராஜ் (28), சித்தையன் கோட்டையைச் சேர்ந்த பால முருகன்(26) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT