Regional03

துர்க்கையம்மன் கோயிலில் நவசண்டி மகாயாகம்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி துர்க்கையம்மன் கோயிலில் நவசண்டி மகாயாகம் நடந்தது.

கிருஷ்ணகிரி போலீஸ் குடியிருப்பில் உள்ள முத்து விநாயகர் துர்க்கையம்மன் கோயிலில் நவ சண்டி மகாயாகம் நடந்தது.

இதையொட்டி கோ பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், நவசண்டி மகாயாகம் ஆகியவை நடந்தது. பகல் 12 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 12.30 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நவ சண்டி மகா யாக விழாக் குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT