ஆயிக்கவுண்டம்பாளையத்தில் நேற்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 
Regional02

அலைபேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு அவிநாசி அருகே சாலை மறியல்

செய்திப்பிரிவு

அவிநாசி வட்டம் பழங்கரை ஊராட்சி ஆயிக்கவுண்டம் பாளையம் செந்தில் நகர், புஷ்பா நகர்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிக்கவுண்டம்பாளையம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறும்போது, "எங்கள் பகுதியில் 300-க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். தனியாருக்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதியின்றி அலைபேசி கோபுரம் அமைக்கும் பணி தொடங்கப்பட் டுள்ளது. பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் அலைபேசி கோபுரம் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர். ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததால் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT