Regional02

பாமகவினர் 2 ஆயிரம் பேர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி, ஒசூரில் அனுமதியின்றி மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் 2 ஆயிரம் பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாமக மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் இளங்கோ, 150 பெண்கள் உட்பட 800 பேர் மீது கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதே போல் ஓசூர் துணை ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட, பாமக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் 200 பெண்கள் உட்பட 1200 பேர் மீது ஓசூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT