கடலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Regional02

கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு போக்குவரத்துக் கழக தொழிற் சங்கத்தினர் உண் ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

14-வது ஊதிய பேச்சு வார்த்தையை உடனே தொடங்கிபேசி தீர்வு காண வேண்டும் என்பது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கடலூர், வடலூர், சிதம்பரம், நெய்வேலி, திட்டக்குடி, பண்ருட்டி, காட்டுமன் னார்கோவில் உள்ளிட்ட 8 அரசு போக்குவரத்துக்கழக பணிமனை கள் முன்பு போக்குவரத்துக் கழக தொழிற் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து கழக தொழிற் சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிமனை தொமுச தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். சிஐடியு பொருளாளர் அரும்பாலன் வரவேற்று பேசினார். எம்எல்எப் கோவிந்தராஜ், எல்பிஎப் ஏழுமலை,சிஜடியு ஆராவமுது, ஏஏஎல்எப் தட்சிணாமூர்த்தி, ஐஎன்டியுசி குணசேகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். எல்பிஎப் ஜெயராவ், சிஐடியு கண்ணன், எல்எல்எப் ரமேஷ், ஏஏஎல்எல்எப் ராஜாங்கம், சிஐடியு பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை யாற்றினர். எம்எல்எப் தலைவர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

14-வது ஊதிய பேச்சு வார்த்தையை உடனே தொடங்கி பேசி தீர்வு காண வேண்டும்.

SCROLL FOR NEXT