உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டையை அடுத்த நத்தாமூர் கிாரமத்தில் கடந்த 10 தினங்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று நத்தாமூர்-திருநாவலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவறிந்த திருநாவலூர் போலீஸார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.