தேனி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோர். 
Regional02

ஊதிய பேச்சுவார்த்தையை நடத்த வலியுறுத்திபோக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

தேனியில் போக்குவரத்து தொழிற் சங்கங் களின் கூட்டுக்குழு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

போக்குவரத்துத் துறை செயலாளர் கொடுத்த வாக்குறுதியின்படி 14வது ஊதிய பேச்சு வார்த்தையை உடனடியாக நடத்த வலியுறுத்தி தேனி அரசு போக்குவரத்துப் பணிமனை முன் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு தேனி கிளை தொமுச தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிஐடியூ அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் கோட்டத் துணைப் பொதுச் செயலாளர் ஜி.மணிகண்டன் தொடங்கி வைத்தார்.

தொமுச சார்பில் என்.ஆர்.முருகன், கணேஷ்பாண்டி, சிஐடியூ சார்பில் மாவட்ட துணைத் தலைவர் ஏ.முருகவேல், பாக்கியச்செல்வன், கணேஷ் ராம், ஐஎன்டியுசி தலைவர் ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிஐடியூ திண்டுக்கல் கோட்ட பொதுச்செயலாளர் என்.ராமநாதன் உண்ணவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.

SCROLL FOR NEXT