Regional02

சருகணியில் வடமாடு மஞ்சுவிரட்டு 13 காளைகள், 117 வீரர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை அருகே சருகணியில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில் 13 காளைகள் பங்கேற்றன. 117 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு காளையை அடக்க 9 வீரர்கள் அடங்கிய குழுவினர் அனுமதிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு போட்டிக்கும் தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. காளைகளை அடக்கிய 9 குழுவினருக்கும், அடக்க முடியாத 4 காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT