சேலம், தருமபுரி மாவட்டங்களில் இன்று 3,209 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிறந்த குழந்தை முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.
மாவட்டத்தில் 1,326 மையங்களிலும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 929 மையங்களிலும் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.
இதில் சேலம் சுகாதார மாவட்டத்தில் 2,61,493 குழந்தைகளும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 1,05,452 குழந்தைகளும் என மொத்தம் 3,66,945 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.
மாவட்டத்திலுள்ள 18 அரசு மருத்துவமனைகள், 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 298 துணை சுகாதார நிலையங்கள், 1934 அங்கன்வாடி மையங்கள், 155 பள்ளிக்கூடங்கள், 18 தனியார் மருத்துவமனைகள், ஊராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.
தருமபுரியில் 984 முகாம்கள்