Regional01

அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு

செய்திப்பிரிவு

திருச்செங்கோடு, எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட வட்டூர், ஏமப்பள்ளி, பட்லூர், மோளியப்பள்ளி ஆகிய 4 இடங்களில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு விழா நடைபெற்றது.

திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் பொன்.சரஸ்வதி தலைமை வகித்து அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்தார். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செல்லப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர் சுதா, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் குருசாமி, மாவட்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் தேவி, திருச்செங்கோடு வட்டார மருத்துவ அலுவலர் அருள்குகன், ஊராட்சித் தலைவர்கள் பிரபாகரன், பூங்கொடி, தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT